கோவையில் ரோஜ்கார் மேளாவில் 371 பேருக்கு பணி நியமன ஆணை - மத்திய இணையமைச்சர் பங்கேற்பு!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா கலந்து கொண்டு, 371 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 371பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசு துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின், மத்திய இணை அமைச்சர், ஜான் பர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அஞ்சல் துறை, தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் மற்றும் ரயில்வே துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 371 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 25 பேருக்கு நேரடியாக மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா ஆணை கடிதங்களை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...