கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி - டாக்டர் கிருஷ்ணசாமி குற்றசாட்டு!

விழுப்புரம் அடுத்த மரக்காணம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, விழுப்புரம், மரக்காணம், மற்றும் மதுராந்தகம் பகுதிகளில். கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்துள்ளனர். 35-கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர்.

திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் முழு மதுவிளக்கு கொண்டு வரப்படும் என்று ஸ்டாலின், கனிமொழி, மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் சட்டவிரோத மது விற்பனை கரைபுரண்டு வருகிறது. மேலும் 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு விதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுவில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

இதில் முதல்வர் ஸ்டாலினிற்கும், அவரது குடும்பத்திற்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்புள்ளது. இதை முறையாக விசாரனை நடத்த வேண்டும். மேலும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய கள்ளச்சந்தை வியாபாரம் செய்ய முடியாது.

இது விபத்தல்ல, திமுகவின் திட்டமிட்ட சதி டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்க திட்டமிட்டு இந்த சதி நடைபெற்று உள்ளது. இதற்கு ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜி, மற்றும் அமைச்சர் பொன்முடிக்கும் தொடர்பு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் கொடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது.

இந்த சதிக்கு ஸ்டாலின், அவரது குடும்பம், மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் முழு பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும். வன விலங்குகள் தாக்கியும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை இப்போது திமுகவின் தவறை மறைக்க உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தில் சாராய ஆலைகளை வைத்திருப்பதும், டாஸ்மாக் பார்களை நடத்துவதும் திமுகவினர் தான். அனைத்து தவறுகளும் டாஸ்மாக்கில் இருந்து தான் துவங்குகிறது. இது விபத்தல்ல திமுகவின் திட்டமிட்ட சதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...