ஓலா, ஊபருக்கு தடைவிதிக்க கோரி திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

ஓலா மற்றும் ஊபர் போன்ற கார்ப்பரேட் டாக்சி நிறுவனங்களால், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதால், அவற்றுக்கு தடை விதிக்க வலியுறுத்தி, திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ஓலா, ஊபருக்கு தடைவிதிக்க கோரி திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான ஊபர், ஓலா உள்ளிட்ட கார்ப்பரேட் டாக்ஸி நிறுவனங்களை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் எப்.சி. காட்டும் போது செலுத்த வேண்டிய தொகையினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...