சேவூர் அரசுப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் வசூல் - வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க ஆசிரியர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: சேவூர் அரசு பள்ளியில் +2 மாணவ மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் வசூலிக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூரில் ஊராட்சியில் இயங்கி வரும் சேவூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், 2022 - 2023 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது.

இதனிடையே தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் சேவூர் அரசுப் பள்ளி வளாகத்தில் நன்னடத்தைச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.



மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு பெற்றோருடன் வந்திருந்த மாணவ-மாணவிகளிடம் சான்றிதழ் வழங்க தலா ரூ.100 வீதம் கட்டாய வசூல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே போல் வசூல் செய்த பணத்திற்கு எந்தவித ரசிதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியர்களின் இந்த வசூல் வேட்டை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...