கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - இருவர் கைது

கோவை ஜி.வி. ரெசிடென்ஸி அருகே கௌசல்யா என்பவர் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது, காரில் வந்த கொள்ளையர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்கச் முயன்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், புகாரின் பேரில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை:ஜி.வி.ரெசிடென்ஸி அருகே காரில் வந்து பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலணியை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் நேற்று காலை ஜி.வி.ரெசிடென்ஸி அருகே நடைபயிற்சில் ஈடுபட்ட போது, காரில் வந்த மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது கவுசல்யா சுதாரித்து செயினை பிடித்துக் கொண்டதால், சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிர் தப்பினார்.



இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து, கோவை விமான நிலையம் அருகே பதுங்கி இருந்த 2 பேரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியவாதவது, ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் கவுசல்யா என்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

எந்த தடயமும் இல்லாத நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்தே பின் தொடர்ந்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அபிஷேக்குமார் (28) திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோவையில் தங்கி ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், இவர் மீது செயின் பறிப்பு வழக்கு உள்ளதும் தெரியவந்துள்ளது.

காரை ஓட்டிவந்தவர் தர்மபுரியை சேர்ந்த சக்திவேல் (28) என்பதும், டாக்ஸி ஓட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் காரில் இருந்த இரண்டு நம்பர் பிளேட்டை அகற்றி விட்டு செயினை பறிக்க முயன்றனர்.



பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராகாட்சிகளை பின் தொடர்ந்து இறுதியாக் அதிகாலையில் விமான நிலையம் அருகே அறையில் தங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.



அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்போரை கட்டுப்படுத்த ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளதால் காரி்ல் சென்று செயினை பறிக்க முயன்றுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் தான் தற்போதைய குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...