ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் மார்ச் 5ம் தேதி புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா

கோவை மாவட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் இரண்டு பொறியியல் கல்லூரிகள், இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியினை குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூரில் செயல்படுத்தி வருகிறது. இக்கல்லூரிகளில் 17 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 



இக்குழுமங்களின் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகள் மற்றும் விருதுகளை பல்வேறு நிறுவனங்களில் பெற்று முதன்மையாக திகழந்து வருகிறது. மேலும், கோவை மற்றும் அதன் சுற்று வட்டராங்களில் பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி இக்கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்.

தற்போது, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிதாக ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டு, வருகின்ற மார்ச் 5-ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இக்கோவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் உடன் கணபதி, முருகன், பகவதி அம்மன் மற்றும் நவக்கிரகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப். 28 துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. மார்ச் 5ம் தேதியன்று கும்பாபிஷேகம் மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் குடுபத்தினருடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா மற்றும் கோவிலை பற்றிய முழு விபரங்களை அறிய 0422-26784001-7 என்ற எண்ணிற்கோ அல்லது www.srikrishna.ac.in என்ற இணையதள முகவக்கோ தொடர்புகொள்ளலாம் என ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள இக்கல்விக் குழுமங்களின் பேருந்துகள் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுகின்றன.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...