கோவையில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட வழக்கு - கைதான இருவரும் தப்பிக்க முயன்ற போது விழுந்து கை உடைந்தது!

கோவை ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம், காரில் வந்து செயினை பறிக்க முயன்ற வழக்கில் கைதான இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்ததில் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று கைதான இருவர், போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது, தடுக்கி விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலணியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண், ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, காரில் வந்த நபர்கள் அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதில், அவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 24 மணி நேரத்தில் அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை போலீசார் பிடித்த போது இருவரும் தப்ப முயன்றனர், அப்போது விழுந்ததில் அபிஷேக் குமாருக்கு வலது கையிலும், சக்திவேலுக்கு இடது கையிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...