கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம் - மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்!

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான கண்‌ மருத்துவ சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் கண்‌ மருத்துவ சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ துவக்கி வைத்தார்‌.

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கண்‌ மருத்துவ சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பேசியதாவது, கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கோவை‌ வடக்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ தூய்மை பணியாளர்களுக்கு வெளிச்சம்‌ திட்டத்தின் கீழ்‌ கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ 2,279 நிரந்தர தூய்மை பணியாளா்‌ மற்றும்‌ 4,097 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்‌, 623 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, 494 ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ கிளீனர்கள் என‌ ஆகமொத்தம்‌ 7493 மாநகராட்சி பணியாளா்களுக்கு அவர்களின்‌ உடல்நலத்தை கருத்தில்‌ கொண்டு கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ இன்று முதல்‌ நடத்தப்படுகிறது.



சங்கரா கண்‌ மருத்துவமனையை சார்ந்த 10 பேர்‌ கொண்ட மருத்துவக்குழு இப்பணியில்‌ ஈடுபட்டு வருகிறார்கள்‌. பார்வை பரிசோதனை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்‌ கண்ணாடியும்‌, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை, தொடா்‌ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தொடா்‌ சிகிச்சையும்‌ இந்த கட்டணமில்லா சிறப்பு கண்‌ முகாமில்‌ வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இன்று நடத்தப்படும்‌ மருத்துவ முகாமில்‌ 150 முதல்‌ 200 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வடக்கு மண்டலத்தில்‌ பணியாற்றும்‌ சுமார்‌ 900 நபர்கள்‌ இந்த முகாமில்‌ பயன்பெறுவார்கள்‌. இத்திட்டத்திற்கு வெளிச்சம்‌ என பெயரிடப்பட்டுள்ளது.

அனைவரும்‌ இந்த கண்‌ சிகிச்சை மருத்து முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மாநகராட்சி முழுவதும்‌ உள்ள 100 வார்டுகளிலும்‌ வெளிச்சம்‌ திட்டம்‌ படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.‌ இதன் மூலம் சுமார்‌ 8,000 நபர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...