வால்பாறையில் கோடை விழா - வரும் 26. 27. 28 தேதிகளில் நடைபெறவுள்ளதாக நகர் மன்ற கூட்டத்தில் அறிவிப்பு!

வால்பாறை நகராட்சியில் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் வரும் மே 26. 27. 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை நகராட்சி தலைவரிடம் முன்வைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 26. 27. 28 தேதிகளில் நடைபெற உள்ளதாக நகர் மன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சியில் இன்று அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர், அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த அவசர கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் வால்பாறையில் கோடை விழா நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பேசிய நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி, கோடை விழாவின் போது 26,27 ஆகிய 2 நாட்கள் மதியம் 2 மணிக்கு தோட்ட தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கவும், அனைவரும் விழாவில் கலந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்,

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகளால் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை தீர்க்க விரைவில் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும். தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வால்பாறை பகுதிக்கு வந்து செல்லும் நிலையில் நகர் பகுதியில் போதிய கழிப்பிடம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



குறிப்பாக பெண்கள் அதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க மார்க்கெட் பகுதியில் உள்ள கழிப்பறையை விரைவில் திறந்து விடவும் வலியுறுத்தப்பட்டது.

ஒன்பதாவது வார்டு பகுதியில் போதிய பணிகள் செய்யாமல் காலம் தாழ்த்தி வரப்படுகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் வார்டு பகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஒன்பதாவது வார்டு நகரமன்ற உறுப்பினர் க. மகுடீஸ்வரன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து 12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சே.அன்பரசன் பேசியபோது, வால்பாறை பகுதியில் பெரும்பாலும் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நகராட்சி திருமண மண்டபத்தை இலவசமாக வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

19ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நல்லமுடி பூஞ்சோலை சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் பகுதியில் கழிப்பிட வசதி, மின் விளக்கு வசதி, இதுவரையிலும் எந்த ஒரு பணியும் செய்யாமல் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட யாரும் எந்த வித ஆய்வும் மேற்கொள்ளாமல் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது.

இனிமேலும் அதே நிலை நீடிக்காமல் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வேண்டிய பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் 19 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பால்சாமி கேட்டுக்கொண்டார்.

எஸ்டேட் பகுதியில் எஸ்டேட் அதிகாரிகள் தங்கிய குடியிருப்புகளை தற்போது காட்டேஜாக மாற்றம் செய்து வியாபார நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். நகராட்சிக்கு எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு வரி கட்டும்போது, காட்டேஜிக்கு குறைந்த வரியே செலுத்தி வருகின்றனர்.

வியாபார நோக்கத்தில் செயல்படும் எஸ்டேட் காட்டேஜ் களை ஆய்வு செய்து நகராட்சிக்கு செலுத்தப்படும் வரியை உயர்த்தவும், ரொட்டிக்கடை பகுதியில் திருமண மண்டபம் வேண்டும் என்று மூன்றாவது வார்டு உறுப்பினர் வீரமணி தெரிவித்தார்.

நகர்மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி அனைவரின் வேண்டுகோள்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.



அதேபோல வருகிற 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற இருக்கும் கோடைவிழா சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு கூட்டத்தை நிறைவு செய்தார். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...