இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம்

இடிகரை பேரூராட்சி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வண்ணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: இடிகரை பேரூராட்சி சுற்றுவட்டாரத்தில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை இடிகரை பேரூராட்சி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இடிகரை, மணியகாரன்பாளையம், செங்காளிபாளையம், வட்டமலைபாளையம்,

கோவிந்தநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...