பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி  ஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட நான்கு வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளிஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.



யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனக்காப்பாளர் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.முதல்நாள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று காண்பது, 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேரடியாக காண்பது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இன்று முதல் மூன்று நாட்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதாகவும் மூன்று நாட்கள் கணக்கெடுப்புக்கு பின் அறிக்கையை முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...