தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயம்

கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் அருகேயுள்ள ராசு கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா(47).அவரை காட்டு யானை தாக்கி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயமடைந்தார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, தென்னநல்லூர் அருகே உள்ள ராசு கவுண்டர் தோட்டத்தில் நின்று அங்கு வீட்டிலிருந்த அரிசி மூட்டை வெளியே சாப்பிட்டது.

சத்தம் கேட்டு, வெளியே பத்மா (47) என்பவர் பார்த்தபோது, திடிரென காட்டு யானை அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து அங்கிருந்த யானையை வனத்துறை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே நரசிபுரம் வெள்ளிமலை பட்டிணம்வடக்கலூர் பகுதிகளில் மற்றொரு காட்டு யானை வழக்கமான நேரத்தில் வராமல் 8 மணிக்கு உலா வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வடக்கலூர் பகுதியில் காட்டு யானை உலா வந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...