கோவையில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - 139 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது!

கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 141 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், நடத்தப்பட்ட விசாரணையில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்றைய தினம் மாவட்ட போலீசார் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மக்கள் மீண்டும் மறுவிசாரணை கோரி மனு அளித்தனர்.



கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 141 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.



இந்த மறு விசாரணையில் 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.



இதில், 139 மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

மேலும் போலீசார் எடுக்கும் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால் அந்தந்த கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...