கோவையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலியான சோகம்!

கோவை சரவணம்பட்டி - விநாயகாபுரம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல், பொள்ளாச்சி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ஆதாமின் ஆனந்தாஸ் (வயது 56). கூலித் தொழிலாளி. இவர் சரவணம்பட்டி - விநாயகாபுரம் சாலையில் நெல்லையப்பர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஆதாமின் ஆனந்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியை சேர்ந்த முருகேசன் (54) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சேகர் (47) என்பவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார்.

இந்நிலையில், இருசக்கர வாகனம் மருதம்பட்டி அம்மா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகன, இவர்களது வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...