கோவை சுந்தராபுரத்தில் அமைக்கப்பட்ட புதிய காவல் நிலையம் - விரைவில் திறப்பு!

கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், இந்த காவல் நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர், 2 துணை ஆய்வாளர்கள் மற்றும் 30 காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் பகுதிகளில் புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்த 3 பகுதிகளிலும் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் சிட்கோ இண்டோசல் பிரதான சாலையில் (பேஸ் டூ) காவல்நிலையம் தயாராகி வருகிறது. இந்த காவல் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர், 2 துணை-ஆய்வாளர், 30 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் ஏதேனும் குற்ற சம்பவம் நடைபெறுமோ என பொதுமக்கள் தயங்கி வந்தனர். தற்போது இங்கு புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...