உக்கடம் கழிவு நீர் தொட்டியில் சட்டவிரோதமாக தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு - ரூ.50,000 அபராதம் விதிப்பு!

உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் சட்ட விரோதமாக தொழிற்சாலையின் நச்சுக் கழிவு நீரை கொண்டு வந்து இறக்கிய கழிவுநீர் வாகன உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை உக்கடம் கழிவுநீர் தொட்டியில் அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுநீரை கலந்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-ல்‌ உக்கடம்‌ சாக்கடை இணைப்பு இல்லாத (UGD) பகுதிகளில்‌ உள்ள வீடுகளில்‌ சேகரிக்கப்படும்‌ கழிவுநீரை வாகனத்தின்‌ மூலம்‌ சேகரித்து மாநகராட்சி கழிவு நீர் ஊற்றும்‌ இடத்தில்‌ இறக்கப்பட்டு, பின்‌ உக்கடம்‌ STP சென்று சுத்திகரிக்கப்பட்டு நல்ல நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில்‌ வெளியேறும்‌ நச்சு கழிவு நீரை இன்று (17.05.2023) மதியம்‌ 12.00 மணிக்கு TN 48 AZ 4780 என்ற வாகனத்தில்‌ எடுத்து வந்து உக்கடம்‌ கழிவுநீர்‌ தொட்டியில்‌ இறக்கும்‌ பொழுது துர்நாற்றம்‌ மற்றும்‌ பச்சை நிறமாக நுரையுடன்‌ வெளியேறியது.

இதுகுறித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்‌ விசாரணை செய்ததில்‌ முன்னுக்கு பின்‌ முரணாக பேசி பணி செய்ய விடாமல்‌ தடுத்த வாகன உரிமையாளா்‌ பழனிசாமி என்பவருக்கு ரூ.50,000 அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, காவல்துறையின்‌ மூலம்‌ வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும்‌ காலங்களில்‌ தொழிற்சாலை மற்றும்‌ பிற வணிக நிறுவனங்களிடமிருந்து வெளியேறும்‌ நச்சுக் கழிவுநீரை உக்கடம்‌ பகுதிக்கு கொண்டு வந்து இறக்கினால்‌ அவர்கள்‌ மீது, அபராதம்‌ விதிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...