கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த அரசு பேருந்து நடத்துனர் - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்!

கரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து நடத்துனர், கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நிலையில், நடத்துனரை பொதுமக்கள் பிடித்து சூலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நடத்துனரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கரூரிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் காங்கேயம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இறங்குவதற்காக அந்த பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியிடம் பேருந்தில் இருந்த கொடுமுடியை சேர்ந்த நடத்துனர் ஞானசேகர் (57) ஆபாச வார்த்தையில் பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த பெண், கல்லூரி அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சக நண்பர்களை வரவழைத்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் இறங்கியவுடன் வேகமாக பேருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. உடனடியாக பெண்ணின் நண்பர்கள் பேருந்தை வழிமறித்து நடத்துனரை பிடித்து நடந்தவற்றை கேட்கும்போது நடத்துனர் அதற்கு ஒத்துழைக்காமல் இருந்துள்ளார்.



உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் நடத்துனரை பிடித்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவியிடம் நடத்துனர் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பெண்ணிடம் புகாரை பெற்றுக் கொண்ட சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் போக்குவரத்து துறையினரும் சூலூர் காவல் நிலையம் வந்து நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...