பல்லடம் அருகே வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதம் - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட 2 கூலி தொழிலாளிகளின் குடும்பங்கள், தங்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை அடுத்த எம்ஜிஆர் நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளியான கருப்பசாமி தனது மனைவி தேவி மற்றும் தனது மகனுடன் நான்கு வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சூறைக்காற்றில் சிக்கி கருப்பசாமி வீட்டின் மேற்கூரை முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. இதில் வீட்டின் உள்ளே இருந்த கருப்புசாமியின் மனைவி தேவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் மேற்கூரை சூறைக்காற்றில் சிக்கி தூக்கி எரியப்பட்டதில், மின்விசிறி, தொலைக்காட்சி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தது.



வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் தங்குவதற்கு இடமின்றி கருப்பசாமியின் குடும்பத்தார் தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேபோன்று கருப்பசாமியின் வீட்டிற்கு அருகேயுள்ள 2 ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.



சூறைக்காற்றில் சேதம் அடைந்த குடும்பத்தாருக்கு அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...