கோவை ஒண்டிப்புதூர் அருகே 12 வயது சிறுமி மாயம் - இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடல்

சிறுமி கடைசியாக ஒண்டிப்புதூரில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்தில் எறிய சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சிறுமி குறித்து எதேனும் தகவல் தெரிந்தால், காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் திப்பே கவுண்டன் வீதியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா (38). இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில், மூத்த மகள் ஸ்ரீநிதி (12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது கோடை விடுமுறை என்பதால், நேற்று வழக்கம் போல் ஸ்ரீநிதி வீட்டின் அருகே தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்து மாயமாகி உள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை, மகள் மாயமானது குறித்து சசிகலாவிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், இரண்டு தனிப்படைகள் அமைத்து மாயமான 12 வயது சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், சிறுமியின் உறவினர்கள் அவரது புகைப்படம் மற்றும் அடையாளங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர். சிறுமியை பார்த்தால், உடனடியாக தகவல் அளிக்குமாறு பெற்றோரின் தொலைபேசி எண்களை பதிவு செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுமி மாயமான வழக்கின் முக்கிய திருப்பமாக, ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்தில், மாயமான சிறுமி ஏறும் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து உள்ளனர். தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எங்கு சென்றார்...? அவர் கடத்தப்பட்டுள்ளாரா..? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், முக்கிய இடங்களான இரயில் நிலையம், பேருந்து நிலையங்கள ஆகிய இடங்களில், சிறுமியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...