கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பைக் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை ரத்தினபுரியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக வேலை சம்பந்தமாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.

எங்கு தேடியும் கிடைக்காததால், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.



அதில், ஒரு இளைஞர், சுரேஷின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.



சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அந்த வீடியோவில் இருக்கும் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...