கோவையில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி!

கோவை சௌரிபாளையம் ஜிவி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி உமா (72). இவர் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்த போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: செளரிபாளையத்தில் பூஜை அறையில் விளக்கேற்றிய போது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

கோவை சௌரிபாளையம் ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் இவரது மனைவி உமா (72). இவர் தனது மகன் பாலச்சந்தர் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உமா நேற்று வழக்கம்போல் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக உமாவின் சேலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

உடல் முழுவதும் பரவிய நிலையில் அங்கிருந்தவர்கள், தீயை அணைத்து உடனடியாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...