கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் மனு!

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறுவதால், அங்குள்ள கடைகளை முன் அறிவிப்பின்றி காலி செய்யும்படி அதிகாரிகள் வலியுறுத்துவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.



கோவை: காந்திரபுரம் சிறைச்சாலை மைதானத்தில் போடப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியையொட்டி அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதான பகுதியில் அரசு பொருட்காட்சி போடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று துவங்கப்பட்ட இந்த பொருட்காட்சி அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். 45 நாட்கள் பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த அரங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி சிற்றுண்டி கடைகளும், போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் சிற்றுண்டி கடை வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், அரசு பொருட்காட்சியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இடம் சுத்தம் செய்யப்படாத காரணத்தினால், அதிகாரிகள் வாய் வார்த்தையை நம்பி வேறு இடத்தில் கடைகளை அமைத்தோம். இந்நிலையில் தற்போது அதிகாரிகள் அரசு தரப்பில் எவ்வித முறையான கடிதமும் வழங்காமல் அக்கடைகளை எல்லாம் அகற்ற கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை தங்களுக்கு சுத்தம் செய்து தர வேண்டும். இல்லையெனில் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப தர வேண்டும். கடந்த முறை தங்களுக்கு அளிக்கப்பட்ட சில சலுகைகளும் முறை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...