கோவையில் மே.21ம் தேதி டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி

கோவையில் இசைக்கலைஞர் ஐசக் நெல்சனின் டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி வரும் 21ம் தேதி, ஆவாரம்பாளையத்தில் உள்ள கோஇந்தியா கலையரங்கில் நடக்க உள்ளது. இந்த இசைக் கச்சேரிக்கு 400 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையை சேர்ந்த இசைக்கலைஞர் ஐசக் நெல்சனின் DADSONS Music Paradise (டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸ்) இசைக் கச்சேரி வரும் 21ம் தேதி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள "கோஇந்தியா" கலையரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.



அப்போது பேசிய ஐசக் நெல்சன், கடந்த மே ஒன்றாம் தேதி கண்களை கட்டிக்கொண்டு 30 இசைக் கருவிகளை இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து உலக சாதனை படைத்துள்ளேன். இதனை வருகின்ற ஜூன் மாதம் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கௌரவிக்க உள்ளது. மேலும் இண்டர்நேஷனல் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் குழுமம் அங்கீகரித்துள்ளது. கோவையில் வருகின்ற மே 21ஆம் தேதி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோஇந்தியா கலையரங்கில் டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த இசைக் கச்சேரிக்கு 400 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இசைக் கலைஞர் ஐசக் நெல்சன் புல்லாங்குழல், சாக்ஸபோன், வீணை, கீபோர்ட், கிட்டார், தபேலா, வயலின் என 30 க்கும் மேலான இசைக்கருவிகளை வாசிப்பவர். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறியவர்கள், பெரியவர்கள், தொழில் அதிபர்களுக்கு இசை வகுப்புகளை நடத்தி வருகிறார்.

காந்திபுரம், சரவணம்பட்டி, துடியலூர், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இவரின் இசைப் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...