கோவையில் முறைகேடாக சிம் கார்டு விற்பனை - 3 பேரை கைது செய்த சைபர் கிரைம்!

கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலி முகவரியை பயன்படுத்தி 538 சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமார், ராம்குமார், ராமசுப்பிரமணியம் ஆகியோரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). தனியார் நிறுவன ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் சிம் கார்டுகளை சாலை ஓரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில், செந்தில்குமார் போலி முகவரி மற்றும் வேறொருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 254 சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதை கண்டுபிடித்த தொலைதொடர்பு நிறுவனம் சென்னையில் உள்ள கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் வழக்கானது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் போலி முகவரி மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர்.

இதேபோல, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொள்ளாச்சியில் போலி ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து 284 சிம் கார்டுகளை விற்பனை செய்த பொள்ளாச்சி தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார்(வயது37), குமரன் நகரை ராமசுப்பிரமணியம் (வயது41) ஆகியோரையும் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...