ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது..! - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என்றும் கூறினார்.



கோவை: ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்து 10 வது ஆண்டு துவங்குகிறது. கோவிட் காலத்தில் நெருக்கடி இருந்தாலும் பொருளாதாரத்தில் 5 வது இடத்தில் இந்தியா இருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி பாதையில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. இதற்கு காரணமான மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கிறது. மே 30 முதல் இந்த சாதனைகளை கடைசி வாக்காளரிடம் வரை கொண்டு சேர்ப்போம்.

ஜல்லிகட்டுக்கு யார் யாரோ கிரிட்டிட் எடுத்து கொள்கின்றனர். ஆனால் உண்மையில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் போது ஜல்லிகட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. 2017 ஜனவரியில் அரசை நாம் வழிநடத்தி, மாநிலத்தை அவசர தீர்மானம் நிறைவேற்ற சொல்லி, அப்போது முக்கிய அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து ஓரே நாளில் 4 அமைச்சகங்களை பார்த்து அனுமதி கொடுக்கப்பட்டது.

2016 அரசாணைக்கு வாங்கிய தடை இப்போது நீங்கி இருக்கிறது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது. கேரளாவில் இருந்து கழிவுகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றது. கேரளாவிற்கு ஏராளமான கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது.

தமிழகம் முழுக்க மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. கள்ள சாராயத்தால் 22 பேர் இறந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமாக மது இருக்கின்றது. மது விலக்கு கொண்டு வர பட வேண்டும். கள்ள சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து நாளை மகளிரணி போராட்டம் நடத்தப்படும்.

மகளிரணி சார்பில் ஆளுநரை பார்த்து மனு அளிக்கவும் இருக்கின்றனர். நாளைய ஆர்ப்பாட்டம் மகளிரணி சார்பில் நடந்தாலுல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஓவ்வொரு ஆண்டும் மே மாதம் மக்களை சந்தித்து இருக்கின்றோம். அது போலதான் இந்த ஆண்டும் நடத்தப்படுகின்றது.

பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் நான்தான் காரணம் என சிலர் சொல்லி கொள்கின்றனர், அது போல ஜல்லிகட்டிற்கு நாங்கள்தான் காரணம் என சொல்லி கொள்கின்றனர். மதுவிலக்கு மாநில அளவில் முடிவு செய்யப்பட வேண்டியது. கள்ளச்சாராய மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கள்ளச்சாரயம் கூடாது என்பதற்காக மதுக்கடைகள் கொண்டு வரப்பட்டது. அப்புறம் ஏன் கள்ளச் சாராயம் வருகின்றது?. சாராயத்திற்கு வழிவகை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.

ஜல்லிக்கட்டின் போது மாநில அரசை வழி நடத்தியது மத்திய அரசுதான். 100 சதவீத கிரிடிட் மத்திய அரசுக்குதான். அப்போது முதல்வராக இருந்தவர் ஒ.பி.எஸ், இதற்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரிமை கொண்டாடினாலும் தவறில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...