செப். 30க்கு மேல் ரூ.2000 நோட்டு செல்லாது - ஆர்.பி.ஐ அதிரடி அறிவிப்பு!

2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.


டெல்லி: ரூ.2,000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், ரூ.2,000 நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ.2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் ரூ.2,000 நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2,000 நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கி கணக்குகளில் செலுத்தலாம் என்றும் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2,000 நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது என அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...