கோவையில் நடைபயிற்சி மேற்கொண்ட தலைமை ஆசிரியரின் 6.5 சவரன் நகை பறிப்பு!

கோவை சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி (55) என்பவரது கழுத்தில் இருந்த 6.5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற நிலையில், போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் 6.5 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரது மனைவி உஷாராணி (55). இவர் அரசு பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உஷாராணி நேற்று மாலை வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது சரவணம்பட்டி ஜனதா நகர் - சிவசக்தி நகர் இடையே செல்லும் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உஷாராணியின் கழுத்தில் அணிந்திருந்த 6.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த உஷாராணி, லேசான காயமடைந்தார். இது குறித்து உஷாராணி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியரின் செயினை பறித்துக் கொண்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...