திருப்பூருக்கு ரேஷன் அரிசி கடத்தல் - கோவையில் 4 பேர் கைது!

கோவையிலிருந்து திருப்பூர் அரவை மில்லுக்கு ரேஷன் அரிசி கடத்திய நான்கு பேரை பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.9 டன் அளவிலான ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பெயரில் தமிழக முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று மாலை கோவை - பேரூர் சாலையில் உள்ள பேரூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சுமார் 2.90 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிவேல் (வயது28) மற்றும் அவருக்கு உதவியாய் வந்த பாரதி ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் அதே பகுதியில் உலா வந்ததை அடுத்து அவர்களையும் மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், பிடிபட்ட நபர்கள் கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், அவருடன் வந்தவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாரதி என்பதும் தெரியவந்தது. இதில் கார்த்திகேயன் பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை திருப்பூரில் உள்ள அரவை மில்லுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.



இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2.90 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...