டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டு அளிக்கலாமா..? - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை வாங்க கூடாது என்று செய்தி வெளியான நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.


இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோடுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது என்றும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வரவு வைக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்றும், உத்தரவை மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...