கர்நாடகாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியேற்பு - கோவையில் காங். கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இன்று ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுள்ளனர். இந்த வெற்றியை கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



கோவை: கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவையும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அமைச்சரவையில் முதல் கட்டமாக 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.



காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதன்படி, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...