கோவையில் கஞ்சா சாக்லேட் பறிமுதல் - உக்கடத்தைச் சேர்ந்த ஒருவர் கைது

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா சாக்லேட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கஞ்சா சாக்லேட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடத்தை சேர்ந்த லியாகத் அலி மகன் அபுதாகீர் (வயது45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 6.250 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட், ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள 77.700 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மூன்று சக்கர வாகனம்-1 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...