பள்ளி வாகனங்களின் தரம் குறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், பொள்ளாச்சியில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்தும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழகத்தில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்க இன்னும் பத்து நாட்களே உள்ளது.



இந்த நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் இயக்கப்படும் பள்ளி பேருந்து மற்றும் வேன்களை இன்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ளமொத்தம் உள்ள 374 பள்ளி வாகனங்களில் 300 வாகனங்கள் இந்த ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த ஆய்வில் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயக்கப்படுகிறதா, வேக கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக வைக்கப்பட்டு உள்ளதா, அவசர காலவழிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 30க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் முறையாக பாதுகாப்பு வசதி இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது.



மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...