பல்லடத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் கிளப் - அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை!

பல்லடத்தில் Murugampalayam Health and Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூடவும், 90 நாட்களுக்கு திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே செயல்பட்டு வந்த தனியார் கிளப்பில் விதிமுறைகள் மீறப்பட்டதால், அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி பெற்று கொக்கரக்கோ என்ற பெயரில் பாருடன் கூடிய உணவகம் இயங்கி வந்தது.

நேற்றிரவு பல்லடம் திமுக நிர்வாகி ஒருவர் மது அருந்திவிட்டு இந்த பாரில் பீர் பாட்டில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், எதற்கு அதிக விலை வைத்து விற்பனை செய்கிறீர்கள் என பார் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு உங்கள் திமுக நகர தலைவர்களில் இருந்து அமைச்சர் வரை அனைவருக்கும் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும். 300 ரூபாய்க்கு விற்றால்தான் என்னால் பணம் கட்ட முடியும் என தெரிவித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.



இந்த நிலையில் இன்று மாலை கலால் துறை உதவி இயக்குனர் ராம்குமார், கோட்ட கலால் வட்டாட்சியர் ராகவி, பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா ஆகியோர் தனியார் பாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வின் போது நேற்றைய ஸ்டாக் எவ்வளவு என்ற கணக்கு முறையாக இல்லை எனவும், மனமகிழ் மன்ற உறுப்பினர்களை தவிர வெளி ஆட்கள் பாரை பயன்படுத்தியதும், முறையான வாகன நிறுத்துமிடம் இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தனியார் பார் 90 நாட்களுக்கு இயக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...