பல்லடம் அருகே பாக்கியை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரி தாக்குதல் - பரபரப்பு!

பல்லடம் அருகே கணபதி பாளையத்தில் 6 மாதங்களாக பாக்கி வைத்திருந்த அரிசி மூட்டைக்கான பணத்தை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் சீனிவாசன் மீது மளிகை கடை உரிமையாளர்கள் இருவர் மிளகாய் பொடியை தூவி சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே அரிசி மூட்டைக்கான பாக்கி பணத்தை கேட்க வந்த ரைஸ் மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடியை தூவி, சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அடுத்த பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சொந்தமாக ரைஸ் மில் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடோன் அமைத்து மளிகை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் பல்லடம் அருகே சின்னாண்டி பாளையம் என்ற இடத்தில் குடோன் அமைத்து கணபதிபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்.

இதனிடையே கணபதி பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை விற்பனைக்கு கொடுத்துள்ளார். ஆறு மாதங்களாக அரிசி மூட்டைக்கான பணத்தை பெரியசாமி சீனிவாசனுக்கு கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பெரியசாமியின் கடைக்கு வந்த ரைஸ் மில் உரிமையாளர் சீனிவாசன் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.



பணத்தை கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததை பார் எனக்கூறி தனது சகோதரர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து சீனிவாசன் மீது மிளகாய் பொடியை தூவி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



அவரது கார் மீது கற்களை வீசி கார் கண்ணாடியை உடைத்து விட்டு கடையை மூடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

படுகாயம் அடைந்த சீனிவாசனை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரைஸ் மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பெரியசாமி என்பவரின் கடையில் கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஏற்கனவே காவல்துறையில் புகார் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...