திருப்பூர் அருகே அனுமதியின்றி இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

திருப்பூர் அருகேயுள்ள மும்மூர்த்தி நகர் பகுதியில் இரும்பு உருக்காலை கழிவுகளை கொட்டுவதற்காக ஏற்றி வந்த பதிவெண் சரியாக இல்லாத லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதியின்றி இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அனுமதியின்றி இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றிவந்த லாரியை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மும்மூர்த்தி நகர் பகுதியில் வாகன எண் சரியாக தெரியாத நிலையில் வந்த சரக்கு வாகனத்தில் மர்ம பொருள் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சிலர் அதனை சிறை பிடித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகன எண் முறையாக இல்லாததால் வாகனத்திற்கு அபராதம் விதித்தனர். வாகனத்தில் கழிவு பொருட்கள் இருந்ததால் உடனடியாக சந்தேகத்தின் பேரில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆய்வு செய்ததில் வாகனத்தில் இரும்பு உருக்காலையில் இருந்து வெளி வந்த கழிவுகள் வைத்திருந்தது தெரியவந்தது.



அந்த கழிவுகளை மும்மூர்த்தி நகர் பகுதியில் இருந்த பாறைக்குழியில் கொட்ட எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோடு சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.



ஆனால் அதற்கான எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லாமல் கழிவுகளை கொண்டு வந்தது தெரிய வந்ததையடுத்து லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் வட்டாட்சியரின் புகாரின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவு கொண்டு வந்த லாரியின் ஓட்டுநர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...