சம்பள பாக்கியை பெற்றுத்தரக் கோரி பல்லடம் காவல்நிலையம் முன்பு கூலி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு!!

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த வெடிவைக்கும் கூலி தொழிலாளி காளிராஜன், சிங்காநல்லூரில் உள்ள தனியார் குவாரியில் வெடிவைக்கும் பணியை மேற்கொண்ட நிலையில், தனது சம்பள பாக்கியை பெற்றுத்தர வலியுறுத்தி பல்லடம் காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: தனியார் குவாரியிடம் இருந்து தனது சம்பள பாக்கியை பெற்றுத்தர வலியுறுத்தி கூலி தொழிலாளி ஒருவர் பல்லடம் காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காளிராஜன் என்பவர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள பூங்கொடி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வெடி வைக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், 1100 வீதம் சம்பளம் பேசப்பட்டு ஐந்து நாட்களுக்கு 5500 ரூபாயில் 500 ரூபாய் மட்டும் முன்பணமாக பெற்றுக் கொண்டுள்ளார். மீதம் கொடுக்க வேண்டிய ஐந்தாயிரம் ரூபாய்க்கு பதில் 3300 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள 1700 ரூபாயை பெற்றுக் கொடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். புகார் அளிக்க சென்ற காளிராஜன் முதலில் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று விட்டு அங்கிருந்து பல்லடம் தாலுகா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததால் தாலுகா காவல் நிலையத்திற்கு வந்து முறையீடு செய்துள்ளார்.

சம்பவம் நடந்த இடம் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் என்பதால் அங்கிருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தன் புகாரை யாரும் பொருட்படுத்தவில்லை எனக் கூறி காளிராஜன் காவல் நிலையம் அருகே இருந்த பெட்ரோல் பங்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி கொண்டு காவல்நிலைய வாயிலில் நின்று பெட்ரோலை உடம்பில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார்.

இதைக் கண்ட காவலர்கள் காளிராஜனை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் சம்பள பிரச்சனை நடந்த இடம் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் காரணமாக பல்லடம் காவல்நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...