வால்பாறை அருகே தனியார் ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகே சத்தியபாமா என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தீயில் கருகி சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: வால்பாறை அருகே தனியார் ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்து உள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் சத்தியபாமா என்பவருக்கு சொந்தமான சிட்டி ஹோட்டல் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்த நிலையில் ஹோட்டலில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் உணவருந்த அதிகளவில் வந்து செல்கின்றனர்.



இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சுமார் 1 மணி அளவில் ஹோட்டல் கடைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.



இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த சேர், டேபிள், மளிகை பொருட்கள், பிரிட்ஜ், கிரைண்டர், உணவு பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தன.



இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்து உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.



மேலும் இந்த தீ விபத்து குறித்து வால்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...