ரூ.2000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் பணத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!

கோவையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தின நிகழ்ச்சிக்கு பின் பேசிய கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பகவதி, பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.


கோவை: எப்போது எந்த நோட்டை செல்லாது என பாஜக அரசு அறிவிக்குமோ என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியினர் நாடு முழுவதும் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட தலைவர் பகவதி செய்தியாளர்களிடம் பேசியதாவது,



ஏழை எளிய மக்கள் கையில் 2000 நோட்டுகள் இல்லை, 500 - 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு அறிவித்தபோது ஒரே நாளில் செல்லாது என அறிவித்துவிட்டு மக்களை காப்பாற்றுவதாக சொல்லி 2000 நோட்டுகளை அச்சடித்தீர்கள்.

ஆனால், 7 ஆண்டுகளில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு பணத்தை நம்பிக்கையாக கொடுத்தது. ஆனால், இன்றைக்கு மக்கள் பணத்தின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.

எந்த ரூபாய் நோட்டுகளை எப்போது செல்லாது என அறிவிப்பார்களோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது. மக்களை திசை திருப்புவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...