வடவள்ளி அருகே உடல் எரிந்து அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை வடவள்ளி அருகே இந்திராணி (68) என்ற மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 27வது ஆண்டாக தனியாக வசித்து வந்த நிலையில், அவரது உடல் எரிந்து நீண்ட நாட்களாகி அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளி அருகே மூதாட்டி ஒருவரது சடலம் எரிந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளி அடுத்த கே.கே.ஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் நாச்சிமுத்து(81) என்பவரது மனைவி இந்திராணி (68). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 27 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திராணி வடவள்ளி அடுத்த வீரகேரளம் அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வடவள்ளி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார், எரிந்து நீண்ட நாட்கள் ஆகி அழுகிய நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...