நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், தேர்தலில் தொண்டனாக வேலை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.



கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதில் பாதி தான் உண்மை, மீதி அனைத்தும் பொய் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



காவல்துறையினருக்கு டைம்லி பிரமோஷன் கிடைப்பதில்லை. கிரேட் 2 பதவியில் இருக்கும் காவல்துறை நண்பர்களுக்கு ப்ரோமோஷன் வராதது கண்டிக்கத்தக்கது.

காவல்துறையின் நலத்தை பார்க்க வேண்டும். டிஜிபி பிரமோஷனுக்கு முதலமைச்சரிடம் பேசி கொண்டு வர வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். திமுக அரசு வந்த பிறகு, அரசு ஊழியர்கள் கமிஷனுக்காக வேலை செய்கின்றனர்.

மின்சாரத் துறை அமைச்சர் பேசுவது பாதி தான் உண்மை பாதி உண்மை இல்லை. ரென்யூபில் எனர்ஜியில் பயனடைந்து வருகிறோம்.ரென்யூபில் எனர்ஜி மத்திய அரசின் கனவு. ரென்யூபில் எனர்ஜியில் உலகத் தலைவராக நாம் மாறப் போகிறோம். இதை தமிழக அரசு பயன்படுத்துவது இல்லை.

சோலார் மானியம் கொடுப்போம் என திமுக அரசு தெரிவித்தது. ஆனால், எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள். எத்தனை பேருக்கு லஞ்சம் இல்லாமல் இணைப்பு கொடுத்துள்ளார்கள். 2021-22, 22-23 ஆண்டை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் 22% விழுக்காடு மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் காவல்துறையால் சாராயம் பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 75% டாஸ்மாக்குகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். கள்ளில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை கள்ளால் எப்படி ஈட்டு கொடுக்க முடியும் என்பதை வெள்ளை அறிக்கையில் உள்ளது.

வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும். 1985-க்கு பிறகு கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு பாஜகவின் மீது உள்ள சலிப்பு தன்மையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் இலவசம், சித்தராமையா இலவசத்தில் மூன்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டு விட்டு வேறு செய்கின்றனர். அறிக்கையை மாற்றிவிட்டனர். பாஜக அரசு பொருளாதாரமான நாட்டை கொடுத்து சென்றதால் கர்நாடகாவில் பட்ஜெட் நன்றாக இருக்கிறது. பாஜக அரசு நடத்தியதை வைத்து தான் சித்தராமையா பட்ஜெட் போடுகிறார்.

ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இல்லை. 2ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள். 2000 ரூபாய் நோட்டால் கொள்ளை அடித்தவர்களுக்கு தான் பிரச்சனை. டாஸ்மாக்கை, கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டியை, எலக்ட்ரிக்சிட்டி பில் கட்டும் இடங்களை மத்திய அரசு மானிட்டர் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாஜகவிற்கு வந்தேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டனாக வேலை செய்வேன்.

2024 தேர்தலில் டெல்லி அரசுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. 2024 நிற்பவர்களை வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...