கோவை மத்திய சிறையில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா!

கோவை மத்திய சிறையில் அரசு பொதுத் தேர்வில் 10ஆம் வகுப்பில் 2 பெண்கள் உட்பட 47 சிறைவாசிகளும் மற்றும் 12ஆம் வகுப்பில் 12 சிறைவாசிகளும் பொதுத் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களுக்கு இன்று சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை மத்திய சிறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மற்றும் தடுப்பு காவல் என சுமார் 2,300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு வகையான மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் இரண்டு பெண் உட்பட 47 சிறைவாசிகளும் மற்றும் 12ஆம் வகுப்பில் 12 சிறைவாசிகளும் பொதுத் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக கோவை சரக சிறை துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, தலைமையில், தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



தொடர்ந்து இன்னர் வீல் கிளப் சார்பாக சிறை மருத்துவமனைக்கு வீல் சேர் ஒன்றும், ஸ்டீல் கட்டில் ஒன்றும் சிறை நூலகத்திற்கு 45 புத்தகங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இவ்விழாவின் போது செந்தமிழ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கனகசுப்ரமணியம் மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் (தெற்கு) தலைவி சுதா, கோதை நாயகம், சுமதி, திரிபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...