காரமடையில் வீடு சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரைச் சேர்ந்த முனியப்பன்(39) என்பவர் நேற்றைய தினம் வீட்டைச் சுத்தம் செய்த போது, ஈரமான கையுடன் செட்டாப் பாக்சை துடைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: காரமடையில் வீட்டை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் முனியப்பன்(39). இவர் காரமடை காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முனியப்பனுக்கு மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி அமுதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார் போனார். எனவே முனியப்பன் தனியாக பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் அவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், காரமடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...