இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலைமிரட்டல் - கோவையில் கால்டாக்சி ஓட்டுநர் கைது!

கோவையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி சூர்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கால்டாக்சி ஓட்டுநர் பைசல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி நாராயணசாமி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சூர்யா (வயது27). இவர் கன்சல்டிங் வேலை செய்து வருகிறார். மேலும், இந்து முன்னணி இயக்கத்தின் செல்வபுரம் நகர தலைவராகவும் இவர் உள்ளார்.

இவருக்கும் கரும்புக்கடையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் பைசல் (வயது45) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன் விரோதம் காரணமாக இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையின்போது சூர்யா, பைசலை கத்தியால் குத்தினார்.

இது தொடர்பாக பந்தய சாலை காவல் நிலையத்தில் சூர்யா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பேரூர் சாலை என்.எஸ்.கே சாலையில் உள்ள தனியார் பேக்கரியில் சூர்யா நின்று கொண்டிருந்தபோது, அதே பேக்கரிக்கு வந்த பைசல் திடீரென சூர்யாவை பார்த்து உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதோடு, ஒருமையில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்போது சூர்யாவுடன் நண்பர்கள் வெற்றி, பாரத் மற்றும் கார்த்தி ஆகியோர் இருந்ததால் ஏதும் செய்யாமல் பைசல் அங்கிருந்து சென்ற நிலையில், சூர்யா செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கரும்புக்கடையை சேர்ந்த பைசலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...