ராஜீவ்காந்தி நினைவு தினம் - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு நாளையொட்டி கோவையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, கோவை மாநகராட்சி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் தலைமையில் விளாங்குறிச்சியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



அப்போது, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், முருகேசன், சுந்தரசாமி, கலைச்செல்வன், விவேகானந்தன், முருகானந்தம் மருதாச்சலம், வெங்கடேஷ் மணி, ரங்கசாமி, பாலு மணிக்குமார், முரளி கிருஷ்ணன், சுரேஷ் பொன்னுச்சாமி, துரைசாமி பட்டிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதேபோல், முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருண்குமார் புருஷோத்தமன் சுரேஷ்குமார் வேலவன் பாலாஜி இந்து ராஜ் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சூரஜ் ரங்கசாமி அருள் அந்தோணி, மணி குமார் கோகுல் அப்பாஸ் ராஜேஷ் கிருஷ்ணராஜ் சரவணகுமார் சௌந்தர் பிரகாஷ் வெங்கடேஷ் முரளி கிருஷ்ணன் நிசாரூதீன் சீனிவாசன் முருகானந்தம் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...