கேரள ரயிலில் போதைப் பொருள் கடத்தல் - கோவையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கேரளாவில் இருந்து கோவை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை ரயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஏறி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பொதுஜன பெட்டியில் இருந்த கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து சோதனை செய்தபோது, அதில் மூன்று பண்டல்களில் சுமார் 3.492 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அந்த பெட்டியில் வந்த பயணிகளிடம் போலீசார் கேட்டபோது, அது தொடர்பான விவரம் யாருக்கும் தெரியாத நிலையில், அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...