கள்ளச்சாராயம், கஞ்சா விற்றால் புகார் அளிக்கலாம்..! - வாட்ஸ்அப் எண் வெளியீட்டு போலீசார் அறிவுரை

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை நடைபெற்றால் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளசாராயம், கஞ்சா விற்பனை குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசார் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் பற்றி தகவல்களை பொதுமக்கள் மது விலக்கு அமலாக்கப்பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

புகார் கொடுப்பவர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மது விலக்கு காவல்துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா கூறும்போது, கள்ளச்சாராயம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது கடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மதுவிலக்கு போலிசாருக்கு தெரிவிக்க 76049 10581 என்ற செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த எண் முலம் வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறிப்பாக முக்கிய பகுதியாக கருதப்படும். சூலுார் கருமத்தம்பட்டி, அன்னுார், துடியலுார் தடாகம், காரமடை மேட்டுப்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு வருகிறது.

அதில் உள்ள செல்போன் எண் முலம் கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...