வால்பாறையில் பெண் சிறுத்தை உயிரிழப்பு - 2 சிறுத்தைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அதில், சிறுத்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சிறுத்தை உயிரிழந்ததை உறுதி செய்தனர்.



பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் பார்கவேதேஜா உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் உதவி வன பாதுகாவலர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சேக்கல்முடி எஸ்டேட் மேலாளர் துருபாக்யோதி ஆகியோர் முன்னிலையில் சிறுத்தையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது.



பின்னர் ஆய்வக பரிசோதனைக்காக உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.



முடிவில் சிறுத்தையின் உடல் தீயிட்டு சம்பலாகும் வரை எரியூட்டப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தை சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை எனவும், மற்ற சிறுத்தைகளுடன் சண்டையிட்டு இருந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...