தமிழ்நாடு காவல்துறையில் முதல்முறையாக மோப்பநாய் பிரிவில் 2 பட்டதாரி பெண் காவலர்கள்!

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு காவல் துறையில் முதல் முறையாக மோப்பநாய் பிரிவில் 2 இளம் பட்டதாரி பெண் காவலர்கள் கோவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான 6 மாத பயிற்சிகள் தொடங்கியுள்ளது.

கோவை: தமிழ்நாடு காவல் துறையில் முதல் முறையாக மோப்பநாய் பிரிவில் 2 இளம் பட்டதாரி பெண் காவலர்கள் கோவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக கோவை மாநகரில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பெண் காவலர்கள் பணிக்கு பயிற்சி வழங்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையில் உள்ள வஜ்ரா உள்ளிட்ட கனரக வாகனங்களை பெண் காவலர்கள் இயக்குவதற்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் பெண் காவலர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல் துறையில் முதல் முறையாக மோப்பநாய் பிரிவில் பெண் காவலர்களை இணைப்பது குறித்து மாநகர போலீசார் ஆர்வமுள்ள பெண் காவலர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.



அதன்படி கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கவிபிரியா (25) மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பவானி (26) ஆகிய பட்டதாரி பெண் காவலர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு இளம் பட்டதாரி பெண் காவலர்களுக்கும் மாநகர காவல் மோப்பநாய் பிரிவு துறையில் ஆறு மாதங்கள் பயிற்சி வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

கடந்த 20 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வரும் கவிப்பிரியா மற்றும் பவானி ஆகியோர் பயிற்சிக்கு பின் கோவை மாநகர மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து இளம் பெண் காவலர்கள் கூறியதாவது, மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் விருப்பமுள்ள பெண் காவலர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே செல்ல பிராணிகள் மீது அதிக ஆர்வம் உள்ளதால் இப்பிரிவை தேர்வு செய்தோம். இங்கே இருக்க கூடிய காவலர்கள் முறையாக பயிற்சி அளிப்பதோடு, ஊக்குவிப்பதால் பயிற்சி எடுப்பது மிகவும் எளிதாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...