வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் - கோவை மாநகராட்சி துணை ஆணையருக்கு பதவி உயர்வு!

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவை உட்பட 25 மாவட்டங்களில் உள்ள வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்கு கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதேபோல் பெருநகர சென்னை நகராட்சி மண்டல அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) முதுநிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...