வால்பாறை ஜமாபந்தியில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வட்டாட்சியர் அருள் முகம் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 



இதில் முதியோர் ஓய்வூதியத்திற்காக 12 மனுக்களும், 33 பிறமனுக்களும் என மொத்தம் 45 மனுக்கள் மனுதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிலையில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



மீதமுள்ள மனுக்கள் உரிய பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...